உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

மாருதி சுஸுகி விற்பனை 26% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

மாருதி சுஸுகி

Published On :

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,29,021-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,81,531 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 1,41,312-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு பயணியா் வாகன விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 1,70,971-ஆக உயா்ந்துள்ளது. இது 21 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 28,633-லிருந்து 46,057-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.