

புதுதில்லி: வணிக வளர்ச்சி விரிவாக்கத் திட்டங்களுக்காக பத்திர வெளியீட்டின் மூலம் ரூ. 2,500 கோடியைத் திரட்டியுள்ளதாக அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.
பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.28% வட்டி வழங்கப்படும் என்றும், வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தை அதிகரிப்பதற்கும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி நீண்டகால வளங்களை மேம்படுத்துவதற்கு இந்த மூலதனம் திரட்டப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம் வங்கி திரட்டும் நிதி எந்தவொரு குறிப்பிட்ட திட்டத்திற்கும் அல்ல என்றும், இந்த வெளியீட்டின் வருமானத்தை வங்கி அதன் வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் என்றது.
இதையும் படிக்க: ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் உச்சம் தொட்ட வெள்ளி விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.