

புதுதில்லி: முதலீட்டாளர்களின் வலுவான தேவை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக இன்று வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1,91,800 என்ற புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளியின் விலை உயர்ந்து, மார்ச் மாதத்தில் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்ட வெள்ளை உலோகம் ரூ.3,736 உயர்ந்து, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஒரு கிலோவிற்கு ரூ.1,91,800 என்ற அதன் சாதனை உயர்வை எட்டியது. விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக முந்தைய அமர்வில் வெள்ளை உலோகமானது ரூ.6,923 உயர்ந்து, ஒரு கிலோவிற்கு ரூ.1,88,665 என்ற சாதனையை அளவில் இருந்தது.
இதற்கிடையில், பிப்ரவரி டெலிவரிக்கான தங்கம் ரூ.173 ஆக உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,30,280 ஆக வர்த்தகமானது.
வட்டி விகித குறைப்பு 25 அடிப்படை புள்ளிகள் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் எதிர் நோக்கியுள்ள நிலையில், தொடர்ச்சியான பணவீக்கம் உள்ளிட்டவையால், எதிர்காலக் கொள்கை தளர்வு குறித்து பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரிக்கையாக கையாளக்கூடும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவை முன்னிட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதால், காமெக்ஸ் சந்தையில் தங்கம் $4,200 ஆக வர்த்தகமானது. அதே நேரத்தில் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைக்கு மத்தியில் வெள்ளி $60 மைல்கல்லை எட்டியது.
மார்ச் 2026 ஒப்பந்தத்திற்கான காமெக்ஸ் சந்தையில் வெள்ளி 2.14% உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $62.14 என்ற வாழ்நாள் உச்சத்தை எட்டியது. நேற்றை வர்த்தகத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $58.40 ஆக முடிவடைந்த பிறகு, கடந்த இரண்டு அமர்வுகளில் வெள்ளை உலோகம் 6.4% அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.89.96 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.