ரெட்மி நோட் 15 5ஜி அறிமுகமாகும் தேதி அறிவிப்பு!

ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 15 ப்ரோ
ரெட்மி நோட் 15 ப்ரோ படம் / நன்றி - ரெட்மி
Updated on
1 min read

ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2026 ஜனவரி 6 ஆம் தேதி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 அறிமுகமாகவுள்ளது.

சீனாவில் வெளியான வடிவமைப்பில் எந்தவித மாற்றமுமின்றி இந்தியாவிலும் ரெட்மி நோட் 15 அறிமுகமாகவுள்ளது. ரெட்மியின் தாய் நிறுவனமான ஷாவ்மி, சமீபத்தில் ரெட்மி 15சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 11,999.

இதனைத் தொடர்ந்து ரெட்மி நோட் 15 இந்திய சந்தைக்கு அறிமுகமாகவுள்ளது. சீனாவில் ஏற்கெனவே இந்த ஸ்மார்ட்போன் வெளியானதால், இந்தியாவில் வெளியாகும்போதும் எந்தவித மாற்றங்களுமின்றி வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 15 சிறப்பம்சங்கள்

  • குவால்கம் ஸ்நாப்டிராகன் 6எஸ் மூன்றாம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • 8GB உள்நினைவகம் மற்றும் 256GB நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 108MP கேமரா சென்சார் உடையதாக இருக்கும்.

  • ரெட்மி நோட் 15 வரிசையில் ரெட்மி நோட் 15 ப்ரோ, ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் அறிமுகமாகவுள்ளது.

  • 6.9 அங்குல திரை கொண்டது

  • 5520mah பேட்டரி திறன் கொண்டது. 33W வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் திறன் உடையது.

ரெட்மி நோட் 15 அறிமுகமாவதுடன், ஷாவ்மி 17 மற்றும் ஷாவ்மி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இரு நாள்கள் நீடிக்கும் பேட்டரி! போக்கோ சி85 இந்தியாவில் அறிமுகம்!!

Summary

Redmi Note 15 5G Launch Date in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com