

போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி திறனுடன் வருவதால், இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் என போக்கோ உறுதி அளித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மியின் மற்றொரு நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படடுள்ளது.
மூன்று வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன், ரெட்மி 15சி வடிவமைப்பைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் கொண்டது.
ஆன்டிராய்டு ஹைப்பர் ஓஏஸ் 2.2 உடையது.
6000mAh பேட்டரி திறனும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால், இரண்டு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்.
பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் (விரல் ரேகை) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
6.9 அங்குல எச்.டி. திரை கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 810nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 11,999.
6GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடையது ரூ. 12,999.
8GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடையது ரூ. 14,499.
இதையும் படிக்க | கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.