பத்திரங்கள் மூலம் ரூ.1,905 கோடி திரட்டிய ஹட்கோ!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.1,905 கோடியைத் திரட்டியுள்ளது.
பத்திரங்கள் மூலம் ரூ.1,905 கோடி திரட்டிய ஹட்கோ!
Updated on
1 min read

புதுதில்லி: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.1,905 கோடியைத் திரட்டியுள்ளதாக தெரிவித்தது.

ஹட்கோ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கிற நிலையில், செபி-யால் கட்டாயமாக்கப்பட்ட மின்னணு ஏலத் தளத்தில், 7 ஆண்டு காலப் பத்திரங்களை 6.98% வட்டி விகிதத்தில் வெளியிட்டதன் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஹட்கோவின் தலைவர் சஞ்சய் குல்ஷ்ரேஸ்தா இது குறித்து தெரிவித்ததாவது:

நம்பகமான, நீடித்த மற்றும் மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவதை உறுதிசெய்யும் நோக்குடன், செலவுகளை குறைப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. இதன் மூலம், 2047 ஆம் ஆண்டிற்கான விக்சித் பாரதத்திற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கு நிறுவனம் துணைபுரிகிறது.

இதையும் படிக்க: மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் வெள்ளி!

Housing and Urban Development Corporation Ltd has raised Rs 1,905 crore by issuing bonds.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com