

புதுதில்லி: வலுவான உலகளாவிய போக்குகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்றும் தனது சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து, முன்பேர வர்த்தகத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.1,93,720 என்ற புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.
மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சின் முன்பேர வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.4,985 உயர்ந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.1,93,720 என்ற உச்சத்தை அடைந்தது. இந்த வெள்ளை உலோகம் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளாகவே சாதனை உச்ச மட்டங்களில் வர்த்தகமாகி வருகிற நிலையில், கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.1,81,742 ஆக இருந்து, இன்று வரையான 3 நாள் வர்த்தகத்தில் ரூ.11,978 உயர்ந்து ரூ.1,93,720 ஆக உள்ளது.
டிசம்பர் 31, 2024 அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.87,233 ஆக இருந்த வெள்ளி இந்த நிதியாண்டில் இன்று வரையிலும் ரூ.1,06,487 உயர்ந்துள்ளது. இதற்கிடையில், பிப்ரவரி மாத விநியோகத்திற்கான தங்க முன்பேர வர்த்தகத்தின் மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராமுக்கு ரூ.845 உயர்ந்து ரூ.1,30,641ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலர் குறியீடு 98.62 ஆக சரிந்த நிலையில், கருவூலப் பத்திரங்களின் வருவாயும் குறைந்தது. அதே வேளையில், பிப்ரவரி மாத விநியோகத்திற்கான தங்க காமெக்ஸ் முன்பேர வர்த்தகத்தின், அதன் விலை அவுன்ஸுக்கு 20.2 அமெரிக்க டாலர் அதிகரித்து 4,245.2 டாலராக உள்ளது.
காமெக்ஸ் சந்தையில், மார்ச் மாத ஒப்பந்தத்திற்கான முன்பேர வர்த்தகத்தில் வெள்ளியின் விலை அவுன்ஸுக்கு 2.22 அமெரிக்க டாலர் உயர்ந்து, அவுன்ஸுக்கு 63.25 அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது. கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் இந்த வெள்ளை உலோகத்தின் விலை 4.84 அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
2024 டிசம்பர் 31 அன்று அவுன்ஸுக்கு 30.96 அமெரிக்க டாலராக இருந்த வெள்ளி, தற்பொது 104.26% ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.