

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 என்ற புதிய வரலாற்று குறைந்தபட்ச நிலையை எட்டியது.
இந்தியா - அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பாதிக்கும் என்பதால், ரூபாயின் மதிப்பு எதிர்மறையான போக்கில் வர்த்தகமாகுவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். சந்தையில் நிலவும் இடர் தவிர்ப்பு மனப்பான்மை மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி உள்ளிட்டவையால் இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் ரூ.89.95 என்ற அளவில் வர்த்தகமானது. பிறகு, அதன் மதிப்பு வெகுவாக சரிந்து, அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 54 காசுகள் சரிவுடன் ரூ.90.48 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவை விட 39 காசுகள் குறைந்து ரூ.90.33 ஆக முடிவடைந்தது.
நேற்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தை! ஆட்டோ, உலோகம் பங்குகள் ஏற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.