

புதுதில்லி: நவம்பர் மாதத்தில் ரூ.3,765 கோடி விற்பனையை தொடர்ந்து, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து சுமார் ரூ.17,955 கோடி விற்பனை செய்துள்ளனர். 2025்ஆம் ஆண்டில் இதுவரையிலும், இந்த தொகையானது ரூ.1.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மூன்று மாதங்களாக தொடர்ந்து நீடித்த வந்த விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அக்டோபர் மாதத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடியை முதலீடு செய்தனர்.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், செப்டம்பரில் ரூ. 23,885 கோடி மதிப்புள்ள பங்குகளையும், ஆகஸ்டில் ரூ. 34,990 கோடி மதிப்புள்ள பங்குகளையும், ஜூலையில் ரூ. 17,700 கோடி மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்துள்ளனர்.
என்.எஸ்.டி.எல். தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 1 முதல் 12 வரையிலான காலகட்டத்தில் எஃப்.பி.ஐ-க்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து சுமார் ரூ.17,955 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்திய ரூபாயின் பலவீனம், உலக அளவில் போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் இந்தியப் பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த தொடர்ச்சியான வெளிநடப்பு நடைபெற்றதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்த அளவு தொடர்ச்சியான விற்பனை இருந்தபோதிலும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பெரும்பாலான அளவில் பங்குகளை வாங்கியுள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகள் மீதான தாக்கம் பெருமளவில் ஈடுசெய்யப்பட்டது.
இதையும் படிக்க: மெமரி சிப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக டிவி விலை உயரக்கூடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.