பட்டியலிடப்பட்ட கரோனா ரெமெடீஸ் பங்குகள் 35% உயர்வு!

கரோனா ரெமெடீஸ் நிறுவனத்தின் பங்குகளின் வெளியீட்டு விலையான ரூ.1,062ஐ விட 35 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் வர்த்தகம் நிறைவு செய்தது.
பட்டியலிடப்பட்ட கரோனா ரெமெடீஸ் பங்குகள் 35% உயர்வு!
Updated on
1 min read

புதுதில்லி: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கரோனா ரெமெடீஸ் லிமிடெட் மருந்து நிறுவனத்தின் பங்குகள், இன்று ஒரு பங்கின் வெளியீட்டு விலையான ரூ.1,062ஐ விட 35 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பிஎஸ்இ-யில், நிறுவனத்தின் வெளியீட்டு விலையிலிருந்து 36.72 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,452க்கு வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும், வர்த்தகமாகி 41.14% உயர்ந்து ரூ.1,499-ஐ எட்டியது. பிறகு 35.32% உயர்வுடன் ரூ.1,437.20ஆக நிலைபெற்றது.

என்எஸ்இ-யில் அதன் பங்குகளின் விலை 38.41 சதவிகித பிரீமியத்துடன் ரூ.1,470-க்கு பட்டியலிடப்பட்டன. பிறகு அதன் பங்குகள் 35.44 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,438.40 ஆக முடிவடைந்தன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8,789.93 கோடியாக உள்ளது.

வர்த்தகம் நடைபெற்ற வரையில், பிஎஸ்இ-யில் 16.33 லட்சம் பங்குகளும், என்எஸ்இ-யில் 128.89 லட்சம் பங்குகளும் நாள் முழுவதும் வர்த்தகமானது.

கரோனா ரெமெடீஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த வாரம் 137.04 மடங்கு அதிக சந்தா பெற்றது. ரூ.655.37 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ-வில் அதன் விலை ஒரு பங்குக்கு ரூ.1,008 முதல் ரூ.1,062 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: போலி ஜிஎஸ்டி மூலம் ரூ.3,000 கோடி வரி ஏய்ப்பு!

Summary

Making a remarkable market debut, shares of pharma firm Corona Remedies Ltd closed with a premium of over 35 per cent against the issue price of Rs 1,062 per share on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com