

புதுதில்லி: போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி அக்டோபர் மாதத்தில் 489 போலியான ஜிஎஸ்டி பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024-25 நிதியாண்டில், போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி 3,977 போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் ரூ. 13,109 கோடி வரி ஏய்ப்பு அரங்கேறியுள்ளது. அதே வேளையில் 2023-24 நிதியாண்டில், இது போன்ற 5,699 போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டு, இதன் மூலம் ரூ.15,085 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் 16 பேரை கைது செய்துள்ளனர். இதுவே 2025 மற்றும் 2024 நிதியாண்டுகளில் முறையே 50 மற்றும் 67 நபர்களை கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.