

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால், இந்திய ரூபாய் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.80 என்ற வரலாறு காணாத அதன் மிகக் குறைந்த நிலைக்கு சென்றது. முடிவில் 25 காசுகள் சரிந்து ரூ.90.74 என்ற புதிய வாழ்நாள் காணாத குறைந்த மட்டத்தில் நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பானது, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.53 என்ற அளவில் வர்த்தகமானது. பிறகு சரிந்து, அதன் வரலாறு காணாத குறைந்தபட்ச அளவான ரூ.90.80க்கு சென்றது. இது அதன் முந்தைய நாள் வர்த்தகத்தின் இறுதி விலையிலிருந்து 31 காசுகள் சரிவாகும்.
வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு முந்தைய நாளின் இறுதி விலையை விட 25 காசுகள் சரிந்து ரூ.90.74 என்ற வரலாறு காணாத குறைந்த அளவில் நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய் நிகராக டாலர் மதிப்பு் 17 காசுகள் சரிந்து ரூ.90.49 என்ற வரலாறு காணாத குறைந்த மட்டத்தில் வர்த்தகமானது.
இதையும் படிக்க: சரிவுடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.