

கச்சா எண்ணெய் விலை : கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதவகையில் வெகுவாகக் குறைந்தது.
ரஷியா - உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை, கரோனா தொற்றுக்காலமான 2021-லிருந்து இல்லாத அளவாக 2.73 சதவிகிதமாக செவ்வாய்க்கிழமையில் குறைந்தது. அதாவது, 1.55 அமெரிக்க டாலர் குறைந்து - பீப்பாய்க்கு 55.27 டாலர் என்ற விலைக்கு செவ்வாய்க்கிழமையில் கீழிறங்கியது.
ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு காரணமாக இருந்தாலும், அசாதாரணமான அதிகப்படியான விநியோகமாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகள், ஏப்ரல் முதல் டிசம்பர் இடையிலான காலகட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 29 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியை அதிகரித்தன.
இருப்பினும், 2026 ஆம் ஆண்டின் எண்ணெய் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 38 லட்சம் பீப்பாய்களை எட்டும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது.
இதையும் படிக்க: சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.