

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,518.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 93.85 புள்ளிகள் அதிகரித்து 84,653.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.20 புள்ளிகள் உயர்ந்து 25,854.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் பங்குச்சந்தை இன்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து வருகின்றன.
சன்ஃபார்மா, டிஎம்பிவி, எம்&எம், என்டிபிசி, மாருதி சுசுகி, கோடக் வங்கி, டாடா ஸ்டீல், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை அதிகபட்சமாக 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.
அதேநேரத்தில் இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், எச்சிஎல் டெக், ஐடிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, பார்மா, ரியல் எஸ்டேட் அதிகபட்சமாக 1 சதவீதம் வரை சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தன.
நிஃப்டி ஐடி, பொதுத்துறை வங்கி குறியீடுகள் முறையே 0.9 சதவீதம், 0.25 சதவீதம் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.10 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.2 சதவீதம் சரிந்தது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,449.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 587.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகள் அதிகமாக வெளியேற்றம், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராதது, உள்ளிட்டவை பங்குச்சந்தையில் இந்த வாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.