
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
PTI

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
PTI
தங்கம், வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. ஒரு லட்சத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
பின்னர், செவ்வாய்க்கிழமை ஒரு சவரன் ரூ. 98,800 ஆகக் குறைந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் ரூ. 99,200 ஆகவும், வியாழக்கிழமை ரூ. 99,520 ஆகவும் உயர்ந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 99,040-க்கும், ஒரு கிராம் ரூ. 12,380-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை வியாழக்கிழமை காலை ஒரு கிலோ ரூ. 2.24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிலோவுக்கு ரூ. 3,000 குறைந்துள்ளது.
இன்று காலை ஒரு கிராம் ரூ. 221-க்கும், ஒரு கிலோ ரூ. 2.21 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...