

மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் தனது ஆரம்பகால ஆதாயங்களை இழந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக 3 காசுகள் சரிந்து ரூ.89.70 என்ற அளவில் எதிர்மறை நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது சந்தை உணர்வை பாதித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.89.53 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு ஒரு கட்டத்தில் ரூ.89.45 என்ற நாளின் உச்சத்தைத் தொட்டு, முந்தைய நாள் முடிவிலிருந்து 22 காசுகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில், ரூபாய் முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.89.70 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக 53 காசுகள் உயர்ந்து ரூ.89.67 என்ற அளவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.