காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 638 புள்ளிகளுடனும், நிஃப்டி 206 புள்ளிகளுடனும் நிறைவு!

சென்செக்ஸ் 638.12 புள்ளிகள் உயர்ந்து 85,567.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,172.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை: அமெரிக்க பெட் வட்டி விகித முடிவுகளுக்கு முன்னதாக தனது பணவியல் கொள்கையில் தளர்வுகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், அந்நிய நிதி வரத்தும் மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்களின் அதீத நேர்மறையான நம்பிக்கையால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 1% உயர்ந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 671.97 புள்ளிகள் உயர்ந்து 85,601.33 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் வர்த்தகத்தின் ஏற்றத்தைத் தொடர்ந்து, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 638.12 புள்ளிகள் உயர்ந்து 85,567.48 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,000 என்ற குறியீட்டைத் கடந்து 26,172.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.8% மற்றும் 1% உயர்ந்தன.

சென்செக்ஸில் டிரென்ட், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ மற்றும் டைட்டன் ஆகியவை பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ட்ரென்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், அதே சமயம் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி லைஃப், சிப்லா, டாடா கன்ஸ்யூமர், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், வெள்ளி விலை சாதனை உச்சத்தை எட்டியதால் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 2.7% உயர்ந்தன. பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானதால் ஜிஇ வெர்னோவா பங்குகள் 5.7% உயர்ந்தன, போட்ஸ்வானா குடியரசு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததால் ரைட்ஸ் பங்குகள் 2.7% உயர்ந்தன. 2-வது காலாண்டு லாபம் 6% சரிந்ததால் சுதீப் பார்மா பங்குகள் 3% சரிந்தன.

எம்.யூ.எஃப்.ஜி. வங்கியுடனான ஒப்பந்தத்தால் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 3.5% உயர்ந்தன. திசைசார் ஆற்றல் ஆயுத அமைப்புகளுக்கான இரண்டு டிஆர்டிஓ தொழில்நுட்பப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனப் பங்குகள் 5% உயர்ந்தன.

இந்திய ரயில்வேயிடமிருந்து ரூ. 39 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதால் கான்கார்ட் கண்ட்ரோல் பங்குகள் 5% உயர்ந்தன. பெங்களூரில் 125 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கையகப்படுத்தியதால் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பங்குகள் 2% உயர்ந்தன.

பிரமோட்டர் சுமார் 0.55% பங்குகளை வாங்கியதால் ஜூபிடர் வேகன்ஸ் பங்குகள் 20% உயர்ந்த நிலையில் தென்னாப்பிரிக்க குளிர்பான நிறுவனமான ட்விஸ்ஸாவை கையகப்படுத்தியதால் வருண் பெவரேஜஸ் பங்குகள் 3.6% உயர்ந்தன. என்.எல்.சி. இந்தியாவிடமிருந்து ரூ. 945 கோடி மதிப்பிலான ஆர்டரைப் கையகப்படுத்துதல் போண்டாடா இன்ஜினியரிங் பங்கு 2.7% உயர்ந்தன.

நால்கோ, எம்சிஎக்ஸ் இந்தியா, கிர்லோஸ்கர் ஆயில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், யுபிஎல், ஹிந்துஸ்தான் ஜிங்க், எம்&எம் ஃபைனான்சியல், ஏஐஏ இன்ஜினியரிங், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட், இந்தியா சிமெண்ட்ஸ், வேதாந்தா, லாரஸ் லேப்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், கேன் ஃபின் ஹோம்ஸ், ஃபீனிக்ஸ் மில்ஸ், டிவிஎஸ் மோட்டார், ஃபெடரல் வங்கி, ஹிந்துஸ்தான் காப்பர் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 2% மேல் உயர்ந்தும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு கிட்டத்தட்ட 2% உயர்ந்தன. ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.

வலுவான பணப்புழக்கம் மற்றும் உலகளாவிய சாதகமான சூழ்நிலைகளால், இந்திய சந்தைகள் ஆண்டின் இறுதியில் தனது ஏற்றத்தை தொடர்ந்தது. அதே வேளையில், 2026ல் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இடையில், வளர்ச்சியானது தொடர்ந்து வலுவூட்டும் விதமாக அமைந்தது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிதி முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரூ.1,830.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.5,722.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய ப்ரென்ட் கச்சா எண்ணெய், 0.86% உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 60.99 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com