

புதுதில்லி: தொழிலாளர்களுடன் சமரச உடன்பாட்டை எட்டியதைத் தொடர்ந்து, ராய்ப்பூர், பலோடா பஜாரில் உள்ள ஸ்ரீ சிமென்ட் ஆலை ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக நிறுவனம் இன்று தெரிவித்தது.
நிர்வாகமும் தொழிலாளர்களும் முரண்பாட்டைத் தீர்க்க ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்டி உள்ளதாக நாட்டின், 3-வது பெரிய சிமென்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிர்வாகம் மேற்கூறிய ஆலையில் விதிக்கப்பட்டிருந்த பூட்டை 2025 டிசம்பர் 22 ஆம் தேதியன்று இரவு 11:00 மணி முதல் விலக்கிக்கொள்வதாக தெரிவித்தது.
கடந்த வாரம், தொழிலாளர்களின் ஒத்துழையாமை காரணமாக டிசம்பர் 18 முதல் ஆலையை பூட்டி வைத்து வைத்துள்ளதாக நிறுவனம் பங்குச் சந்தைக்கு தெரிவித்திருந்த நிலையில், சிமென்ட் உற்பத்தி நாள் ஒன்றுக்கு சுமார் 10,000 டன் அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நிறுவனம் மதிப்பிட்டிருந்த நிலையில், ஆலை முடிய காலத்தில் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு வேறு எந்தவிதமான சேதம் ஏற்படவில்லை என்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.