டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79-ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து தொடர்ந்து வெளியேறும் மூலதனம் மற்றும் தங்கம் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ரிசர்வ் வங்கியின் டாலர்-ரூபாய் மாற்று ஒப்பந்தங்கள் மற்றும் திறந்த சந்தை செயல்பாடுகள் குறித்த அறிவிப்பு இருந்தபோதிலும், வலுவான டாலர் தேவை மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் இது சந்தை உணர்வுகளை மேம்படுத்த தவறியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.89.56 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு ஒரு கட்டத்தில் ரூ.89.51 என்ற நாளின் உச்சத்தைத் தொட்டு, முந்தைய நாள் முடிவிலிருந்து 12 காசுகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில், ரூபாய் தனது ஆதாயங்களை இழந்து, முந்தைய நாள் முடிவிலிருந்து 16 காசுகள் சரிந்து ரூ.89.79 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்
ஏற்ற-இறக்கங்களுக்கு மத்தியில் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!
Summary

The rupee pared initial gains and settled for the day lower by 16 paise at 89.79 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com