

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) காலை நிலவரப்படி சற்றே உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,533.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.35 மணியளவில் சென்செக்ஸ் 55.55 புள்ளிகள் அதிகரித்து 85,580.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 26,205.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
2 நாள்கள் உயர்வுக்குப் பிறகு நேற்று பங்குச்சந்தைகள் சரிவடைந்த நிலையில் இன்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ் பங்குகளில் என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ட்ரென்ட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. இதனிடையே இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் போன்ற தகவல் தொழில்நுட்பப் பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.12 சதவீதமும் ஸ்மால்கேப் 100 குறியீடு 0.27 சதவீதமும் அதிகரித்தது.
நிஃப்டி ரியல் எஸ்டேட், உலோகம், தனியார் வங்கி குறியீடுகள் முறையே 0.48 சதவீதம், 0.47 சதவீதம், 0.3 சதவீதம் உயர்ந்தன. இருப்பினும், நிஃப்டி ஐடி குறியீடு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.