

மும்பை: அந்நிய நிதி தொடர் வெளியேற்றம் மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் நிலவி வரும் எதிர்மறைப் போக்கு ஆகியவற்றின் காரணமாக இன்று டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் சரிந்து ரூ.89.98ஆக முடிவடைந்தது.
அந்நிய நிதி தொடர் வெளியேற்றம் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவையால் முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக பாதித்தக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகராக ரூ.89.95 என வர்த்தகம் தொடங்கி, அதன் பிறகு நாளின் குறைந்தபட்ச அளவான ரூ.89.99 சென்று பிறகு, அதிகபட்ச விலையான ரூ.89.88 தொட்ட நிலையில், முடிவில் ரூபாயின் மதிப்பு எட்டு காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து 89.90 ஆக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.