

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் உலக அரசியல் நிகழ்வுகளால் உள்ளூரில் பங்கு விற்பனை அதிகரித்து, இந்திய குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் வாரத்தைத் தொடங்கி, முடிவில் சரிவுடன் நிறவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 345.91 புள்ளிகள் சரிந்து 84,695.54 ஆகவும், நிஃப்டி 100.2 புள்ளிகள் சரிந்து 25,942.10 ஆகவும் நிலைபெற்றது.
இந்திய குறியீடுகள் உயர்வில் தொடங்கினாலும், அதன் வேகத்தை இழந்து, வர்த்தக நேரத்தின் பெரும்பகுதி நேரம் சரிந்து வர்த்தகமானது. நிஃப்டி 25,920.30 என்ற குறைந்தபட்ச நிலைக்குச் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச நிலைக்கு அருகிலேயே வர்த்தகம் நிறைவுற்றது.
இன்றைய வர்த்தகத்தில் 3,294 வர்த்தகமான நிலையில் 1,022 பங்குகள் உயர்ந்தும் 2,185 பங்குகள் சரிந்தும் 87 பங்குகள் மாற்றமின்றி நிறவடைந்தன.
சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், எச்சிஎல் டெக், பவர் கிரிட், ட்ரென்ட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சரிந்த நிலையில் டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எடர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் டிரென்ட், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர், ஏசியன் பெயிண்ட்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், டிரென்ட், மேக்ஸ் ஹெல்த்கேர், இன்டர்குளோப் ஏவியேஷன், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் ஆகியவை சரிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.4% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.5% சரிந்தன.
மீடியா தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஆட்டோ, ஐடி, பார்மா, ரியால்டி, பவர் 0.4 முதல் 0.9% வரை சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1.70% உயர்ந்து 61.67 அமெரிக்க டாலராக நிலைபெற்றது.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.317.56 கோடி மதிப்புள்ள பங்குகளை கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,772.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
பங்கு சார்ந்த நடவடிக்கைகளில் இன்று 29.28 லட்சம் பிர்லாநு பங்குகள் கைமாறிய நிலையில் அதன் விலை 9% உயர்ந்தன. எம்ஓஐஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.230 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் வென்றதால் எஸ்இபிசி நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 4% அதிகரித்தன.
புரோமோட்டர்ஸ் தங்களுடைய 8.93% பங்குகளை விற்பனை செய்ததால் டைமெக்ஸ் குரூப் - இந்தியா பங்குகள் 6.6% சரிந்தன. எம்.பி. ஊர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தக் கடிதத்தை பெற்றதால் விக்ரன் இன்ஜினியரிங் பங்கின் விலை 2% உயர்ந்தன. ரூ.725 கோடி மதிப்புள்ள ஒப்பந்தக் கடிதத்தைப் பெற்றதால் சோலார்வேர்ல்ட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகள் 5% அதிகரித்தன.
ஹிந்துஸ்தான் காப்பர், ஹிந்துஸ்தான் ஜிங்க், வேதாந்தா, சிட்டி யூனியன் வங்கி, எம்சிஎக்ஸ் இந்தியா, டைட்டன் நிறுவனம், நால்கோ, என்எம்டிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஐஷர் மோட்டார்ஸ், கிராஃப்ட்ஸ்மேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று அதன் 52 வார உச்சத்தை எட்டியது.
மறுபுறம் டிக்சன் டெக்னாலஜிஸ், பிசிபிஎல் கெமிக்கல்ஸ், கிளீன் சயின்ஸ், ஏசிசி, ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், கோல்கேட் பாமோலிவ், பாலி மெடிக்யூர், வேதாந்த் ஃபேஷன்ஸ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட பங்குகள் தங்களின் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.