

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் கடும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,004.75 என்ற புள்ளிகளில் தொடங்கியது. தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வரும் நிலைல்யில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 253.06 புள்ளிகள் குறைந்து 84,788.39 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68.50 புள்ளிகள் குறைந்து 25,973.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி 50 குறியீட்டில், டாடா ஸ்டீல், எடர்னல், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் பங்குகள் அதிக லாபம் ஈட்டின. லார்சன் & டூப்ரோ, டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மெட்டல் குறியீடு அதிக லாபமடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நிஃப்டி கெமிக்கல்ஸ், ஆயில் அண்ட் கேஸ் ஆகிய 2 குறியீடுகளும் லாபம் பெற்றன. ஐடி, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் உள்ளிட்ட மற்ற துறை குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.10 சதவீதம், 0.22 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டினர் பங்குகளை அதிகம் விற்பது, உலகப் பொருளாதார சூழ்நிலை, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 89.95 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.