

வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்த நிலையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,600.99 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 91.48 புள்ளிகள் குறைந்து 84,604.06 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 29.05 புள்ளிகள் குறைந்து 25,913.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி 50 குறியீட்டில் பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல், மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தன. அதேநேரத்தில் பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.19 சதவீதம், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.33 சதவீதம் சரிந்தது.
துறைகளில், நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 0.42 சதவீத சரிவுடன் அதிக இழப்பைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து நிதிச் சேவைகள், இரசாயனங்கள் குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மாறாக, மெட்டல், ஆட்டோ குறியீடுகள் லாபத்துடன் வர்த்தகமாகின்றன.
கடந்த டிச. 23 முதல் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. டிச. 25 மட்டும் கிறிஸ்துமஸ் விதிமுறையாகும். அதன்படி தொடர்ந்து 5 ஆவது நாளாக பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டு வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலக பொருளாதாரம், வெளிநாட்டு பங்குகள் அதிகம் விற்பனை, தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.