

புதுதில்லி: பலவீனமான உலகளாவிய போக்குகள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் லாப முன்பதிவு செய்ததால், இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து முடிவடைந்தன.
2025ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளில், சரிவைக் கண்ட பிப்ரவரி மாத டெலிவரிக்கான தங்கம், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராமுக்கு ரூ.1,098 குறைந்து ரூ.1,35,568 ஆக உள்ளது.
இதேபோல், மார்ச் 2026 ஒப்பந்தத்திற்கான வெள்ளி ஃபியூச்சர்ஸின் விலை கணிசமாக ரூ.18,784 குறைந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.2,32,228 என்ற குறைந்தபட்ச விலையை எட்டியது.
பிறகு, வெள்ளி சற்றே மீண்டு, கிலோ ஒன்றுக்கு ரூ.13,444 குறைந்து ரூ.2,37,568 ஆக வர்த்தகமானது. அதே வேளையில், முந்தைய வர்த்தக அமர்வில் வெள்ளி உயர்ந்து, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ரூ.26,583 அதிகரித்து, கிலோ ஒன்றுக்கு ரூ.2,51,012 ஆக கிட்டத்தட்ட 12% உயர்வுடன் முடிவடைந்தன.
திங்கள்கிழமை வர்த்தகத்தில், வர்த்தகர்கள் லாபம் முன்பதிவு செய்ததால், வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், பிறகு கணிசமாகக் சரிந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.2,24,429 ஆக நிலைபெற்றது.
லாப முன்பதிவில் வர்த்தகர்கள் ஈடுப்பட்டதாலும், டாலரின் மதிப்பு மீண்டதாலும் இந்த ஆண்டின் கடைசி வர்த்தக நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்தன.
உலக அளவில், பிப்ரவரி மாத டெலிவரிக்கான தங்க ஃபியூச்சர்ஸ் விலை காமெக்ஸில் அவுன்ஸுக்கு $45.95 சரிந்து $4,340.35 ஆக உள்ளது. அதே வேளையில் மார்ச் 2026 ஒப்பந்தத்திற்கான வெள்ளி ஃபியூச்சர்ஸ் விலையும் சரிந்து அவுன்ஸுக்கு $6.56 சரிந்து $71.35 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.