

புதுதில்லி: நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஜனவரி 1 முதல் அதன் அனைத்து மாடல் கார்களுக்கும் விலை உயர்த்தியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அனைத்து மாடல் கார்களுக்கும் சராசரியாக சுமார் 0.6% விலை உயர்வை அமல்படுத்தப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கவும், அதன் வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தைக் குறைக்கவும் முயற்சி செய்து வந்த நிலையிலும், இந்தச் சிறிய விலை உயர்வு மூலம், அதிகரித்த சில செலவுகளை சந்தைக்குக் கடத்த வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் உள்ளதாக தெரிவித்தது.
ஹூண்டாய் தற்போது, ஹேட்ச்பேக் ரக i10 நியோஸ் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி-யான ஐயோனிக் 5 வரை பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.