

புதுதில்லி: ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி மற்றும் எடர்னல் ஊழியர்கள் இன்று ஊதியம் மற்றும் பணி நிலைமையை கோரி ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோதிலும், ஸ்விக்கி மற்றும் எடர்னல் பங்குகள் கலவையான நிலையில் வர்த்தகமானது.
இந்த வேலைநிறுத்தம், புத்தாண்டு தினத்தன்று வலுவான வணிகத்தை கண்ட ஆன்லைன் உணவு விநியோக தளங்களின் சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிஎஸ்இ-யில் ஸ்விக்கி பங்குகள் 2.10% சரிந்து ரூ.386.20-ஆக நிலைபெற்ற நிலையில், வர்த்தக நேரத்தின்போது இது 2.37% சரிந்து ரூ.385.15 ஆக நிறவடைந்தன.
எடர்னல் பங்குகள் 0.34% சிறிய லாபத்துடன் ரூ.277.95 ஆக வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், வர்த்தக நேரத்தின் உச்சபட்சமாக 1.15% வரை உயர்ந்து ரூ.280.20 ஐ எட்டியது.
சில இடங்களில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும், புத்தாண்டு தினத்தன்று சேவைகளில் குறைந்தபட்ச இடையூறுகளை உறுதி செய்வதற்காக, சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக ஊக்கத்தொகைகளை வழங்கி வருவதும் பண்டிகைக் காலங்களில் பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நடைமுறையாகும்.
சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி மற்றும் விரைவு வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் பலர் வேலைக்கு வரவில்லை என்று தொழிலாளர் அமைப்புகள் தெரிவித்தாலும், புத்தாண்டு தினத்தன்று தங்களுக்கு வழக்கம் போல் வணிகம் நடைபெறும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.