வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.
dollar
dollar
Published on
Updated on
1 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்.

கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் கனடா பொருள்களுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்று(பிப். 3) அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 67 பைசா சரிந்து 87.29 ஆகக் குறைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 87 ஆகத் தொடங்கிய நிலையில் பின்னர் 87.29 ஆக சரிந்தது.

இதனிடையே, கடந்த வார இறுதியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 5.574 டாலர் பில்லியன் அதிகரித்து 629.557 டாலர் பில்லியனாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது அந்நியச் செலாவணி இருப்பு 1.888 பில்லியன் டலர் குறைந்து 623.983 பில்லியன் டாலராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com