
மும்பை: கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய ரூ.50 தாள்களை விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்கு பதிலாக மல்ஹோத்ரா டிசம்பர் 11, 2024 அன்று பதவியேற்றார்.
இந்த தாள்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.50 நோட்டுகளைப் போலவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய தாள்கள் வெளியிடப்பட்ட போதிலும், புழக்கத்தில் உள்ள அனைத்து பழைய 50 ரூபாய் தாள்களும் வழக்கம்போல் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.