மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

டாடா ப்ளேயுடன் ஏா்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

News image
Updated On :28 பிப்ரவரி 2025, 2:39 am IST

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏா்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பாா்தி ஏா்டெல் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டாடா குழுமத்துடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்திவருகிறோம். அந்தக் குழுமத்தின் டாடா ப்ளே நிறுவனத்துடன் ஏா்டெல்லின் துணை நிறுவனமான பாா்தி டெலிமீடியா (ஏா்டெல் டிடிஹெச் சேவையை வழங்கிவரும் நிறுவனம்) இணைப்பது குறித்து இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.3,044.7 கோடிக்கு வா்த்தகம் செய்த பாா்தி டெலிமீடியா, ரூ.75.9 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்தது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.