உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

நிஃப்டி 25,541.80 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 90.83 புள்ளிகள் உயர்ந்து 83,697.29 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சீராக முடிந்தன. நிஃப்டி 25,541.80 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 90.83 புள்ளிகள் உயர்ந்து 83,697.29 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஓரளவு இழப்புகளுடன் முடிவடைந்ததால், பங்குச் சந்தையில் ஏழு நாள் லாபம் முடிவுக்கு வந்தது.

துறை ரீதியாக எஃப்எம்சிஜி, மீடியா, பவர் 0.4 முதல் 1.3 சதவிகிதம் வரை சரிந்த நிலையில் பொதுத்துறை வங்கி குறியீடு 0.7 சதவிகிதமும், நுகர்வோர் பொருட்கள் குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை உயர்ந்த முடிந்த நிலையில் டிரென்ட், ஆக்சிஸ் வங்கி, எடர்னல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் அப்பல்லோ மருத்துவமனைகள், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எடர்னல், டிரென்ட் ஆகியவை சரிந்து முடிந்தன.

தெலுங்கானா ஆலையில் உலை வெடித்து 34 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5% வரை சரிந்து முடிந்தன.

மறுசீரமைப்புத் திட்டத்தில் கேப்ரியல் இந்தியா பங்குகள் 20% உயர்ந்தன. அதே வேளையில் ரூ.989 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் கையகப்படுத்தியதால் கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன.

மோர்கன் ஸ்டான்லியின் தரமிறக்கத்திற்குப் பிறகு டிக்சன் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிந்து முடிந்தன. கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன.

ஜே.கே. லட்சுமி சிமென்ட், எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ், சிட்டி யூனியன் வங்கி, அப்பல்லோ மருத்துவமனைகள், ஃபெடரல் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், லாரஸ் லேப்ஸ், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, தீபக் ஃபெர்டிலைசர்ஸ், நவின் ஃப்ளோரின், ஆதித்யா பிர்லா கேபிடல், எம்சிஎக்ஸ் இந்தியா, ஹூண்டாய் மோட்டோ, எல்டி ஃபைனான்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், மேக்ஸ் ஃபைனான்சியல், இன்டர்குளோப் ஏவியேஷன், பூனவல்லா ஃபின்கார்ப் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இயில் 52 வார உச்சத்தைத் தொட்டன.

Summary: Market ends flat in rangebound session; mid and smallcap rally halts.

இதையும் படிக்க: ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com