ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக தெரிவித்தது.
கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்
கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக இன்று தெரிவித்தது.

இந்தப் புதிய ஆர்டர்களுடன், நிதி ஆண்டு 2026ல் இன்று வரை நிறுவனத்தின் மொத்த ஆர்டர் ரூ.7,150 கோடியை எட்டியுள்ளதாக கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் தெரிவித்துள்ளது.

நிறுவனம், அதன் சர்வதேச துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது.

கேபிஐஎல் மேலாண்மை இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரியான மணீஷ் இது குறித்து தெரிவித்ததாவது:

கடந்த சில ஆண்டுகளில் உலகளவில் கிரிட் உள்கட்டமைப்பிற்கான தேவை அதிகரித்ததன் பின்னணியில் எங்கள் பரிமாற்றம் மற்றும் விநியோக பொறியியல் திறன் உள்ளது.

மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம், கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனம், ரயில்வே, எண்ணெய் & எரிவாயு குழாய்கள், நகர்ப்புற இயக்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய சிறப்பு பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் ஒன்றாகும்.

Summary: New Delhi: Kalpataru Projects International Limited secured new orders worth Rs 989 crore in the power transmission and distribution sector.

இதையும் படிக்க: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com