அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக ஏற்ற-இறக்கத்துடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி !

சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளாகவும் நிஃப்டி எந்தவித மாற்றம் இல்லாமல் 25,461.30 ஆக முடிந்தன.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை
Published on
Updated on
2 min read

மும்பை: ஜூலை 9 அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் அந்நிய நிதி வெளியேற்றத்துக்கு மத்தியில், பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட மாறாமல் முடிவடைந்தன.

இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 83,516.82 புள்ளிகளும் குறைந்தபட்சமாக 83,262.23 புள்ளிகளாக இருந்தது. உயர்விற்கும், தாழ்விற்கும் இடையில் ஊசலாடிய நிலையில், 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் இறுதியாக 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளாகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி மாறாமல் 25,461.30 ஆக முடிந்தன.

ஜூலை 9 அன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு டிரம்ப் விதித்த 90 நாள் கெடு முடிவடையவுள்ளது. மேலும் அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவிகித கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க கட்டண அறிவிப்புகளுக்கு முன்னதாக, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், அமர்வு முழுவதும் குறியீடு பெரும்பாலும் குறுகிய வரம்பில் வர்த்தகமானது.

சென்செக்ஸில் இந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன. அதே வேளயைில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஓஎன்ஜிசி, எடர்னல் ஆகியவை சரிந்து முடிந்த நிலையில் எச்யூஎல், டாடா கன்ஸ்யூமர், நெஸ்லே இந்தியா, ஜியோ பைனான்சியல் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

துறை வாரியாக எஃப்எம்சிஜி குறியீடு 1.6 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்தது. அதே நேரத்தில் மீடியா குறியீடு 1 சதவிகிதமும், ஐ.டி. மற்றும் உலோக குறியீடு தலா 0.7 சதவிகிதம் சரிந்ததன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், முதல் காலாண்டு வணிக புதுப்பிப்புக்குப் பிறகு நைக்கா பங்குகள் உயர்ந்தன.

ரூ.913 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற நிலையில் ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் (Hazoor Multi Projects) பங்குகள் 15% க்கும் அதிகமாக உயர்ந்தது. மும்பையில் மறுவளர்ச்சி உரிமைகளைப் புரவன்கரா நிறுவனம் பெற்றதால் அதன் பங்குகள் 3.6% உயர்ந்ன.

ஸ்பெயினில் புதிய புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுக்கான ஐரோப்பிய காப்புரிமை சரிபார்க்கப்பட்ட நிலையில், கோதாவரி பயோ-ரிஃபைனரீஸின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.

மார்ச் காலாண்டு லாபம் 36% உயர்ந்த நிலையில், அதன் வருவாய் ஆண்டுக்கு 57% உயர்ந்த பிறகு சீமென்ஸ் எனர்ஜியின் பங்குகள் 4% உயர்ந்தன.

டோமினோவின் துருக்கி விற்பனை வளர்ச்சி முதல் காலாண்டில் (Q1) மந்தமாக இருந்ததால் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் பங்குகள் 4% சரிவு.

க்ளென்மார்க் பார்மா, எல்டி ஃபைனான்ஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், நவின் ஃப்ளூரின், ஈஐடி பாரி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், லாரஸ் லேப்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், காமா ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 150 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

இதையும் படிக்க: ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!

Summary

Benchmark indices ended flat with Nifty hovering around 25,450 as investors turned cautious ahead of likely development around the US-India trade deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com