அதிக பேட்டரி திறனுடன் ரெட்மி பேட் 2!

இந்த வாரம் வெளியாகும் ரெட்மி பேட் 2 சிறப்பம்சங்கள்...
ரெட்மி பேட் 2
ரெட்மி பேட் 2 படம்: X/Xiaomi
Published on
Updated on
1 min read

ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மியின் பேட் 2 (Pad 2) ஆண்ட்ராய்டு டேப்லட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலின் அடுத்த வரிசையாக 4 ஜி இணைப்புடன் ரெட்மி பேட் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா சிப்செட்

2.5கே தெளிவுத்திறன் கொண்ட 11 இன்ச் திரை

பேட்டரி  9,000 எம்ஏஎச்

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

8 எம்பி ஏஐ பின்புறக் கேமிரா

5 எம்பி முன்புறக் கேமிரா

டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 19 மணிநேரம் விடியோ பார்க்க முடியும், 22 மணிநேரம் படிக்க முடியும், 270 மணிநேரம் பாடல் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 22,000*

8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 26,000*

பிலிப்பைன்ஸ் நாட்டில் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com