ஹோண்டா கோல்டு விங் டூரின் 50-வது ஆண்டு விழாவுக்கான பைக் அறிமுகம்!

ஹோண்டா கோல்டு விங்கின் 50-வது ஆண்டு விழா பதிப்பு பற்றி...
ஹோண்டா கோல்டு விங்..
ஹோண்டா கோல்டு விங்..
Published on
Updated on
1 min read

ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பைக்குகளை தயாரித்துவரும் ஹோண்டா மோட்டர்சைக்கில் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோண்டா கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான புதிய பதிப்பை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விற்பனை டாப் டீலர்களிடம் மட்டும் துவங்கியுள்ளது.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் நீண்ட தூர பயனாளர்களுக்கு ஏற்றவகையிலான சொகுசு இருக்கை, 7 அங்குல திரை, நேவிகேஷன், ஆடியோ கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை உள்ளன.

மேலும், 50 ஆண்டு விழாவை ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் வகையில் பைக்கை ஆன் செய்யும் போது since 1975 எனத் திரையில் தோன்றும். அதோடுகூடவே மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்கள், புளூடூத், 2 யுஎஸ்பி சி சாக்கெட், சக்கரத்தில் காற்று இருப்புக்கான மானிட்டர் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

முக்கிய விவரக் குறிப்புகள்

ஹோண்டா கோல்டு விங்கில் 1833cc லிக்விட் கூல்ட் என்ஜின், 4 ஸ்ட்ரோக் 24 வால்வுகளுடன் தட்டையான ஆறு சிலிண்டர்கள் 125 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 7 ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது.

ABS மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து பாதுகாப்பான சவாரிக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த கோல்டு விங் பைக். நான்கு சவாரி முறைகளுடன் வரும் இந்த பைக்கில் டூர், ஸ்போர்ட், எகான் மற்றும் ரெயின் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பைக் போர்டோ சிவப்பு மெட்டாலிக் (Bordeaux Red Metallic colour) நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குருகிராமில் கிடைக்கும் என்றும் இதன் விலை: ரூ.39.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இது கோல்டு விங் லட்சிணையுடன் since 1975 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com