விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சரிந்து முடிந்த பங்குச் சந்தை வர்த்தகம்!

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன.

News image
கச்சா எண்ணெய்- கோப்புப் படம்
Updated On :13 ஜூன் 2025, 2:45 pm

DIN

புதுதில்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் 6.11 சதவிகிதமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 5.34 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 3.91 சதவிகிதமும் மும்பை பங்குச் சந்தையில் சரிந்தன.

ஸ்பைஸ்ஜெட் 5.64 சதவிகிதமும், இன்டர்குளோப் ஏவியேஷன் 5.62 சதவிகிதமும் சரிந்து முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 8.56 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 75.30 என்ற அமெரிக்க டாலர்களாக உள்ளது.

பெயிண்ட் பங்குகளில், பெர்கர் பெயிண்ட்ஸ் 4.47 சதவிகிதமும், இண்டிகோ பெயிண்ட்ஸ் 3.24 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.94 சதவிகிதமும் சரிந்தன. அதே வேளையில் அப்பல்லோ டயர்ஸ் பங்குகள் 3.67 சதவிகிதமும், எம்ஆர்எஃப் 0.65 சதவிகிதமும் சரிந்து முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.