ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதால், எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

News image
Updated On :9 மார்ச் 2026, 7:10 pm IST

புதுதில்லி: தொடர்ந்து 2வது வாரமாக மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதால், கச்சா எண்ணெய் சந்தைப்படுத்தல் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் 6.12 சதவீதமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 5.05 சதவீதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் 4.30 சதவீதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் பங்குகள் 4.18 சதவீதமும், இண்டிகோ பெயிண்ட்ஸ் 3.83 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 2.75 சதவீதமும், கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் 2.09 சதவீதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் 1.88 சதவீதமும் சரிந்தன.

எண்ணெய் விலை உயர்வால், கச்சா எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எண்ணெய் விலை உயர்வானது, எரிசக்தி தொடர்பான துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 14.17 சதவீதம் உயர்ந்து 105.9 அமெரிக்க டாலராக உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விலை உயர்வால் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் லாபம் குறையும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Summary

Shares of oil marketing companies and paint manufacturers ended lower on Monday amid a sharp rally in crude oil prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.