கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிந்தன.


புதுதில்லி: மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தையின் பலவீனமான போக்கு உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிவுடன் நிறவடைந்தன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பங்குகள் 4.53 சதவீதமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 3.36 சதவீதமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 2.81 சதவீதமும், கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் பங்குகள் 3.77 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 2.89 சதவீதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் 2.55 சதவீதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியாவின் பங்கு 1.67 சதவீதமும், இண்டிகோ பெயிண்ட்ஸ் 1.65 சதவீதமும் மற்றும் அக்ஸோ நோபல் இந்தியா 1.17 சதவீதம் சரிந்தன.
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 8.25 சதவீதம் உயர்ந்து 78.92 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பலவீனமான இந்திய ரூபாய் மதிப்பு, எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் உள்ளிட்டவை, பணவீக்கத்தை அதிகரித்து, நிதி மற்றும் எரிசக்தி மற்றும் ரசாயனம் சார்ந்த துறைகளை பாதிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...