பிளஸ் 2 பொதுத் தோ்வு: 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 1,048.34 புள்ளிகள் குறைந்து 80,238.85 ஆகவும், நிஃப்டி குறியீடு 312.95 புள்ளிகள் சரிந்து 24,865.70 ஆக நிலைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 12:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்து வருவது தொடர்ந்து, முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டதால், பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து முடிவடைந்தன.

தொடக்க வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 2,743.46 புள்ளிகள் சரிந்து 78,543.73 ஆக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 575.15 புள்ளிகள் சரிந்து 24,603.50 ஆக இருந்தது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,048.34 புள்ளிகள் குறைந்து 80,238.85 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 312.95 புள்ளிகள் சரிந்து 24,865.70 ஆக நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் 3,296 பங்குகள் வர்த்தகமான நிலையில், 639 பங்குகள் உயர்ந்தும் 2,580 பங்குகள் சரிந்தும் 77 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில், இன்டர்குளோப் ஏவியேஷன், லார்சன் & டூப்ரோ, அதானி போர்ட்ஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா மற்றும் ஐடிசி பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் எல் அண்ட் டி, இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் மற்றும் ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.5 சதவீதம் வரை சரிந்தன.

உலோகங்களைத் தவிர, ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அனைத்து துறை குறியீடுகளும் தலா 2 சதவீதம் சரிந்தன.

ஈரான் அதன் உச்ச தலைவரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்க தொடங்கியது. இதனையடுத்து, பிரெண்ட் எண்ணெய் விலை, பீப்பாய் ஒன்றுக்கு 8.34 சதவீதம் உயர்ந்து 78.95 அமெரிக்க டாலராக உள்ளது.

ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கேய்-225 குறியீடு 1 சதவீதத்திற்கும் மேலாகவும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 2 சதவீதத்திற்கும் மேலாகவும் சரிந்தன. அதே வேளையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன. விடுமுறை காரணமாக தென் கொரி பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. ஐரோப்பிய சந்தை வெகுவாக சரிந்தன.

அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமை அன்று சரிவுடன் முடிவடைந்தன.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய சந்தைகளில் ஒருவித தயக்கம் நிலவுகிறது. இந்த பதற்றம் இந்திய சந்தையிலும் இன்று எதிரொலித்தது. மேலும் அதிகரித்து வரும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான பதற்றங்கள், ஆசிய மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பலவீனமான இந்திய ரூபாய் மதிப்பு, எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் உள்ளிட்டவை, இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரித்து, நிதி மற்றும் எரிசக்தி மற்றும் ரசாயனம் சார்ந்த துறைகளை பாதிக்கும்.

தரவுகளின் அடிப்படையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.7,536.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.12,292.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்யுள்ளனர்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 3ஆம் தேதி பங்குச் சந்தைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீடு

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் பங்குகள் இன்று 34.61 சதவீத தள்ளுபடியுடன், பங்கு ஒன்றுக்கு ரூ.68 என்ற விலையில் அறிமுகமான நிலையில் 29% சரிந்து முடிந்தது.

நிஃப்டி-யில் 8.83 சதவீத தள்ளுபடியில் பங்கு ஒன்றுக்கு ரூ.960 என்ற விலையில் பட்டியலிடப்பட்ட பிறகு, முடிவில், கிளீன் மேக்ஸ் பங்குகள் 18.5 சதவீதம் சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.