மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து 2வது அமர்வாக சரிந்து முடிவடைந்தன.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தொடர்ந்து 3வது அமர்வில், இன்றும் ஐடி பங்குகளில் ஏற்பட்ட விற்பனை தொடர்ந்தது, இந்த வாரம் நிஃப்டி ஐடி குறியீடு 9 சதவீதம் சரிந்த நிலையில், ஏப்ரல் 2025 க்குப் பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,048.16 புள்ளிகள் சரிந்து 82,626.76 ஆகவும், நிஃப்டி 336.10 புள்ளிகள் சரிந்து 25,471.10 ஆக நிலைபெற்றது.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் 1.1 சதவீதமும், நிஃப்டி குறியீடு 0.9 சதவீதமும் சரிந்துள்ள நிலையில், நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவீதம் சரிந்தன.
சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், டைட்டன், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை சரிந்தும் மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை சரிந்தும் மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் உயர்ந்தன.
துறை ரீதியாக அனைத்து முக்கிய குறியீடுகளும் இன்றைய வர்த்தகத்தில் சரிவில் முடிவடைந்தன. எரிசக்தி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் தலா 2 முதல் 3 சதவீதம் சரிந்தன. அதே நேரத்தில் ஐடி, நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி, தொலைத்தொடர்பு, இன்ஃப்ரா, ஆட்டோ, மின்சாரம், பொதுத்துறை நிறுவனம் மற்றும் எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் தலா 1 சதவீதம் சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், காலாண்டு லாபம் 95% உயர்ந்த போதிலும் முத்தூட் ஃபைனான்ஸ் பங்குகள் 11% வரை சரிந்தன. வருவாய் சிறப்பாக இருந்தபோதிலும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 6% வரை சரிந்தன.
வருவாய் சமமாக இருந்த நிலையில் ஓஎன்ஜிசி பங்குகள் 3% வரை சரிந்தன. ரூ.2,350 கோடி அளவு உள்நாட்டு ஆர்டர்களை கையகப்படுத்தியதால் டிரான்ஸ்ரயில் லைட்டிங் பங்குகள் 1% உயர்ந்தன. வலுவான வருவாய் இருந்தபோதிலும் இந்திய ஹோட்டல் நிறுவனத்தின் பங்குகள் 1% சரிந்தன.
எல்டி டெக்னாலஜி, நியூஜென் சாப்ட்வேர், ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், சின்ஜீன் இன்டர்நேஷனல், கேபிஐடி டெக்னாலஜிஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், ரூட், மாஸ்டெக், டாடா டெக்னாலஜிஸ், கிளீன் சயின்ஸ், கன்சாய் நெரோலாக், பாலி மெடிக்கர், ஏடபிள்யூஎல் அக்ரி, ஐஜிஎல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சொனாட்டா சாப்ட்வேர், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாப்ட்வேர் உள்ளிட்ட 200 மேற்பட்ட பங்குகள் இன்று 52 வாரக் குறைந்த நிலையை எட்டியது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.108.42 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.276.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.32 சதவீதம் உயர்ந்து 67.81 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Indian benchmark indices extended their decline for a second consecutive session on February 13, weighed down by a sharp selloff in IT stocks on third consecutive session.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

சென்செக்ஸ் 1,690.23, நிஃப்டி 486.85 புள்ளிகள் சரிவுடன் நிறவைு!

கச்சா எண்ணெய் விலை எதிரொலி: சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகள், நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிவு!

போர் பதற்றம்: கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


