எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக இயற்கை எரிவாயு குழாய்த் திறனை விரிவுபடுத்துவதில் ரூ.844 கோடி முதலீடு செய்யப்போவதாக கெயில் தெரிவித்துள்ளது.
GAIL reports record profits in FY25, recommends Rs 1 final dividend
GAIL reports record profits in FY25, recommends Rs 1 final dividend
Published on
Updated on
1 min read

புது தில்லி: அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக தஹேஜ்-உரான்-டபோல்-பன்வெல் இயற்கை எரிவாயு குழாய்த் திறனை விரிவுபடுத்த ரூ.844 கோடி முதலீடு செய்யப்போவதாக அரசுக்குச் சொந்தமான எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் தெரிவித்துள்ளது.

தஹேஜ்-உரான்-டாபோல்-பன்மெல் இயற்கை வாயு குழாய் DUPL-DPPL நெட்வொர்க், தற்போது நாள் ஒன்றுக்கு 19.9 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவை கடத்தும் திறன் கொண்டது. இது தற்போது நாள் ஒன்றுக்கு 22.5 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் ஆக விரிவுபடுத்தப்படும் நிலையில், வரும் மூன்று ஆண்டு காலத்திற்குள் குழாய்களின் கொள்ளளவும் அதிகரிக்கப்படும் என்றும் அதற்கு ரூ.844 கோடி தேவைப்படும் என்றது.

இதற்கிடையில் ஜூன் 30, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரையான காலத்தில் 1,702 கிமீ மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் (MNJPL) திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாகவும் இதற்கு கூடுதலாக ரூ.411.12 கோடி முதலீடு தேவைப்படும் என்றது.

இதற்கிடையில் திட்டச் செலவு ரூ.411.12 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் திட்டத்திற்கான திருத்தப்பட்ட திட்டச் செலவு ரூ.8,255.37 கோடியாகும் என்றது. இது முதலில் அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவான ரூ.7,844.25 கோடியை விட 5.24% அதிகமாகும்.

மும்பை-நாக்பூர் குழாய் பதித்தல் பணி 693 கி.மீ. வரை நிறைவடைந்த நிலையில், மீதம் 1 கிலோ நிலுவையில் உள்ளதாகவும், நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் பதித்தல் பணி 692 கிமீ வரை நிறைவடைந்து 98 சதவிகிதம் நிறைவு பெற்றதாக தெரிவித்தது.

மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் வன அனுமதி, தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதில் தாமதம் காரணமாக குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

நாக்பூர்-ஜபல்பூர் குழாயின் 317 கிமீ குழாய் அமைக்கும் பாதை 97 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் பயன்பாட்டு உரிமை கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் உள்ளூர் எதிர்ப்பு காரணமாக குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை-நாக்பூர்-ஜார்சுகுடா குழாய் அமைக்கும் பாதை செப்டம்பர் 2025க்குள் படிப்படியாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது கெயில்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.86.78 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com