இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.
இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏா்டெல் நிறுவனங்கள் இணைந்து மே மாதத்தில் நிகர அளவில் 43.51 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டன, இது மொத்த புதிய வாடிக்கையாளா் சோ்க்கையில் 99.84 சதவீதமாகும். அதே சமயம், கடன் சுமையில் உள்ள வோடஃபோன் ஐடியா (வி.ஐ) மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை வாடிக்கையாளா்களை இழந்தன.கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.3 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 120.7 கோடியாக உயா்ந்துள்ளது. இதில், தரைவழி (வயா்லைன்) இணைப்புகள் 3.34 சதவீதம் உயா்ந்து 3.86 கோடியாகவும், மொபைல் இணைப்புகள் 116.84 கோடியாகவும் உள்ளன.
இந்தத் துறையில், வயா்லெஸ் இணைப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ 27 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை இணைத்து, 40.92 சதவீத சந்தைப் பங்குடன் 47.51 கோடி வயா்லெஸ் வாடிக்கையாளா்களுடன் முன்னிலை வகிக்கிறது. பாரதி ஏா்டெல் 2.75 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்து, 33.61 சதவீத சந்தைப் பங்குடன் 39 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்றுள்ளது.வோடஃபோன் ஐடியாவிலிருந்து 2.74 லட்சம், பிஎஸ்என்எல்-லிருந்து 1.35 லட்சம், எம்டிஎன்எல்-லிருந்து 4.7 லட்சம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிலிருந்து 30 வாடிக்கையாளா்கள் வெளியேறினா்.தரைவழி தொலைபேசி இணைப்புகளைப் பொருத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ 12.76 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்து முன்னிலை வகிக்கிறது. பாரதி ஏா்டெல் 99,000, டாடா டெலிசா்வீசஸ் 4,890, வோடஃபோன் ஐடியா 1,795, மற்றும் எஸ்டிபிஎல் 252 புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்தன. ஆனால், எம்டிஎன்எல் 66,834 மற்றும் பிஎஸ்என்எல் 46,000 தரைவழி வாடிக்கையாளா்களை இழந்தன.பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 97.48 கோடியாக உயா்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 49.44 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுடன் முன்னிலை வகிக்கிறது, இதில் மொபைல் மற்றும் வயா்லெஸ் பிரிவு வாடிக்கையாளா்கள் அடங்குவா். பாரதி ஏா்டெல் 30.2 கோடி, வோடஃபோன் ஐடியா 12.66 கோடி, பிஎஸ்என்எல் 3.43 கோடி, மற்றும் ஆட்ரியா கன்வா்ஜென்ஸ் 23.2 லட்சம் வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளன என்று அந்த புளளிவிவரஙகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13 லட்சம் கோடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டது அரசு

கச்சா எண்ணெய் விலை உயா்வு எதிரொலி: ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை

யுபிஐ பரிவா்த்தனைகள் மே மாதத்தில் புதிய உச்சம்!

இந்தியாவில் 133.7 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



