
மும்பை: ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளைப் போலவே இருக்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான அனைத்து தாள்களும் சட்டப்பூர்வமானவை என்று தெரிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்த பின்னர் பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்கு பதிலாக மல்ஹோத்ரா 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் சரிந்தும், நிஃப்டி உயர்ந்து முடிவு!