மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44-ஆக முடிவு!

பங்குச் சந்தைகளில் உள்ள நேர்மறையான போக்கும் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை சரிவால் இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.

News image
Updated On :19 மார்ச் 2025, 12:05 pm

DIN

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.

இருப்பினும், அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுக்கு முன்னதாக டாலர் வலுவடைந்தது உள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.60 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.43 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.68 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் உயர்ந்து ரூ.86.44 ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.