
ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கான விற்பனை இன்று (மார்ச் 26) மதியம் தொடங்கியது.
பி3 அல்ட்ரா 5ஜி
ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான அம்சங்களுடன், 7 மில்லி மீட்டர் அளவில் மெல்லிய வடிவமைப்புடன், வளைந்த டிஸ்பிளேவுடன், தண்ணீருக்குள் புகைப்படம், விடியோ எடுப்பதற்கு ஏற்றவகையில் வாட்டர் புரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
6.67 அங்குல திரை
இரண்டு சிம் கார்டுகள் பொருத்தும் வசதி
ஆண்ட்ராய்ட் 15 ரியல்மி யூஐ 6.0 (அப்டேட்)
50 எம்பி பின்பக்க கேமரா மற்றும் அதனுடன் எல்இடி லைட், 2 எம்பி போர்ட்ரைட் கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார் அன்லாக்
டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருபுறமும் ஸ்பிக்கர்கள்
மொபைலின் எடை: 194 கிராம்
16.3 செ.மீ உயரம் மற்றும் 7.56 செ.மீ. அகலம் (7 மி.மீ. தடிமன்)
6000 எம்ஏஹெச் பேட்டரி திறன் மற்றும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
மொபைலின் விலை
6 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.16,999
8 ஜிபி ரேம் + 128 உள்நினைவகம் ரூ.17,999
8 ஜிபி ரேம் + 258 உள்நினைவகம் ரூ.19,999
இதையும் படிக்க: மேம்படுத்தப்பட்ட செய்யறிவு (ஏஐ) அம்சங்களுடன் சாம்சங் கேலக்சி ஏ 26!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.