ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் கார்கள்

ரூ.10 லட்சத்துக்குள் எந்த எலக்ட்ரிக் கார் வாங்கலாம்?
எலக்ட்ரிக் கார்
எலக்ட்ரிக் கார்
Published on
Updated on
2 min read

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்துக்குள் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மின்சார கார்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

டாட்டா பஞ்ச் இவி

TATA PUNCH EV
TATA PUNCH EV

இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்வது டாட்டா மோட்டார்ஸ். அந்நிறுவனத்தின் ’பஞ்ச்’ மாடல் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி எலக்ட்ரிக் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

டாட்டா பஞ்ச் பேஸ் மாடலின்(ஆரம்ப ரகம்) ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு அதிகம் விற்பனையான மின்சார கார் மாடல் என்ற சிறப்பையும் டாட்டா பஞ்ச் பெற்றுள்ளது.

25 கிலோ வாட், 35 கிலோ வாட் ஆகிய இரு பேட்டரி மாடல்களில் டாட்டா பஞ்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

25 கிலோ வாட் திறன் கொண்ட இதிலுள்ள பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 265 கி.மீ. மைலேஜ் தருகிறது. 35 கிலோ வாட் திறன் பேட்டரியை உடைய டாட்டா பஞ்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 365 கி.மீ. மைலேஜ் தருகிறது.

டாட்டா டியாகோ இவி

TATA TIAGO EV
TATA TIAGO EV

ரூ.10 லட்சம் வரை பட்ஜெட் ஒதுக்க முடியாதென்று நினைப்பவர்கள் டாட்டாவின் டியாகோ மாடலை தேர்வு செய்யலாம். இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கி.மீ. மைலேஜ் தருகிறது. இதன் விலை ரூ.8 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.

எம்ஜி காமெட் இவி

MG COMET EV
MG COMET EV

ஜே.எஸ்.டபிள்யு மோரிஸ் கேரேஜ்(எம்ஜி) மோட்டார் இந்தியா நிறுவனம் சிறிய அளவிலான காரை குறிப்பாக நகர்ப்புற மக்களுக்காவே எம்ஜி காமெட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், 4 பேர்(ஓட்டுநருடன் சேர்த்து) வசதியாக நகர்வலம் வர உகந்த கார் இது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் சாலைகளில் அதிகம் இருக்கும் நிலையில், இந்த கார் சிறிய அளவில் இருப்பதால் எளிதாக ஓட்டிச் செல்லலாம்(டிரைவர் ப்ரெண்ட்லி கார்). பார்க்கிங் செய்வதற்கும் அதிக இடம் தேவைப்படாது.

இதன் விலை ரூ.7 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கி.மீ. மைலேஜ் தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com