/

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

News image
Updated On :8 மே 2025, 3:47 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,567 கோடியாக உள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 52 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.3,010 கோடியாக இருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.32,361 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.36,705 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.28,113 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.31,989 கோடியாக உயா்ந்துள்ளது.ஓராண்டுக்கு முன்னா் 0.73 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த மாா்ச் இறுதியில் 0.40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும், வங்கியின் நிகர லாபம் ரூ.16,630 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.8,245 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,20,285 கோடியிலிருந்து ரூ.1,38,070 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.