எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 252.97 புள்ளிகள் சரிந்து 82,277.77 ஆகவும், நிஃப்டி 67.6 புள்ளிகள் சரிந்து 24,994.50 ஆக இருந்தது.

News image
கோப்புப் படம்- ENS
Updated On :16 மே 2025, 8:14 am

DIN

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெகுவாக உயர்ந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது.

மூதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததாலும் அதே வேளையில் ஆசிய சந்தைகளில் பெரும்பாலும் இன்று பலவீனமான போக்குகள் காரணமாக சந்தைகள் சரிவை சந்தித்தன.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 252.97 புள்ளிகள் சரிந்து 82,277.77 ஆக இருந்தது. அதே வேளையில் நிஃப்டி 67.6 புள்ளிகள் சரிந்து 24,994.50 ஆக இருந்தது.

சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், பவர் கிரிட், எச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் சரிந்தும் எடர்னல், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமான நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி சற்று உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.08 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 64.58 அமெரிக்க டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.5,392.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: டிஐஐ லாபம் ரூ.880 கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.