மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு

செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு குறித்து...

Updated On :

2024-25-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமா உருக்கு உற்பத்தி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிட்டெடின் (செயில்) ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,250.98 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.1,125.68 கோடி நிகர லாபத்தைப் பெற்றிருந்தது.

முந்தைய நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.27,958.52 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.29,316.14 கோடியாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செலவினங்கள் ரூ.26,473.86 கோடியிலிருந்து ரூ.28,020.56 கோடியாக அதிகரித்துள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,066.67 கோடியில் இருந்து ரூ.2,371.80 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.