

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,516.69 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 67.04 புள்ளிகள் குறைந்து 83,392.11 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66.25 புள்ளிகள் குறைந்து 25,531.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பவர் கிரிட், எடர்னல், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், எச்.சி.எல்.டெக், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு முறையே 0.65 சதவீதம் மற்றும் 0.98 சதவீதம் சரிந்தன.
துறைகளில், நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.7 சதவீதம், எஃப்.எம்.சி.ஜி குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்த நிலையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 0.9 சதவீதம் சரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.